தொழில்நுட்பம்

உலகின் அதிவேக எஸ்டி கார்டு அறிமுகம்

Published On 2017-03-28 12:25 GMT   |   Update On 2017-03-28 12:25 GMT
சோனி நிறுவனம் உலகின் அதிவேக எஸ்டி கார்டினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:  

சோனி இந்தியா நிறுவனம் உலகின் அதிவேக எஸ்டி கார்டினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. SF-G சீரிஸ்-இன் புதிய எஸ்டி கார்டு வியாபார ரீதியிலான புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்டி கார்டுகளுடன் எஸ்டி மெமரி கார்டு ரீடரையும் வெளியிட்டுள்ளது. இதை கொண்டு கணினிகளில் அதிவேகமாக தரவுகளை டிரான்ஸ்ஃபெர் செய்ய முடியும். 

சோனியின் புதுவரவு எஸ்டி கார்டு SF-G32/T1 IN 32 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ.6,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SF-G64/T1 IN கார்டு 64 ஜிபி ரூ.11,000 என்றும், SF-G128/T1 IN  128 ஜிபி ரூ.19,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் புதிய எஸ்டி கார்டுகளுக்கு ஐந்து ஆண்டுகள் வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது.   

இத்துடன் சோனி MRW-S1/T1 IN கார்டு ரீடர் இந்திய மதிப்பில் ரூ.2,300 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கும் இந்த கார்டு ரீடரை வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



நொடிக்கு 299 எம்பி என்ற ரைட் ஸ்பீடு மற்றும் 300 எம்பி என்ற ரீட் ஸ்பீடு கொண்டுள்ளதால் சோனி SF-G சீரிஸ் கொண்டு தரவுகளை அதிவேகமாக பரிமாற்றி கொள்ள முடியும். இத்துடன் அதிக தரமுள்ள புகைப்படம், வீடியோக்களையும் நொடிகளில் பரிமாற்றம் செய்ய முடியும். 

இந்த கார்டுகளை கொண்டு 4K, 2K, ஃபுல் எச்டி, XAVCS Codec தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். சோனியின் அல்காரிதம் மூலம் தரவுகளின் தரம் குறையாமல் பரிமாற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்டுகளை வாங்கும் போது அழிந்து போன புகைப்படம் மற்றும் வீடியோக்களை மீட்க வழி செய்யும் மென்பொருளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Similar News