தொழில்நுட்பம்

சோனியின் மர்மமான ஸ்மார்ட்போன் இணையத்தில் லீக் ஆனது

Published On 2017-02-02 23:31 GMT   |   Update On 2017-02-02 23:31 GMT
சோனி நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வரும் மர்ம ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு சோனி நிறுவனம் ஐந்து ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என கூறப்பட்டது.
டோக்கியோ:

இம்மாதம் பார்சிலோனாவில் நவடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனி நிறுவனம் ஐந்து ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம் என செய்திகள் வெளியாகின. எனினும் இவற்றின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர தகவல்கள் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.  

இந்நிலையில் சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் தயாரிக்கப்படுவது ப்ளூடூத்  SIG மூலம் தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கும் இத்தகவல் அந்நிறுவனம் வெளியிட இருப்பதாக கூறப்பட்ட ஐந்து ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

முன்னதாக குறிப்பிட்டதை போன்றே இந்த ஸ்மார்ட்போன் குறித்து அதிகளவு தகவல்கள் வெளியாகவில்லை. தற்சமயம் வரை இந்த ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 4.1 வசதி வழங்கப்படுவது மட்டும் உறுதியாகியுள்ளது.   

ஏற்கனவே வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் ஒன்றை சோனி நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4K டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

Similar News