தொழில்நுட்பம்

உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்: விலை மற்றும் அம்சங்கள்

Published On 2017-01-25 12:17 GMT   |   Update On 2017-01-25 12:17 GMT
உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனுக்கு கான்ஸ்டெல்லேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை இங்கு பார்ப்போம்.
லண்டன்:

விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பிரபல வெர்டு (Vertu) நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. கான்ஸ்டெல்லேஷன் (Constellation) என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் விலை பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக வெர்டு சிக்னேச்சர் டச் போனின் துவக்க விலை 5 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. 

புதிய வெர்டு ஸ்மார்ட்போன் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் மற்றும் மென்மையான லெதர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் QHD AMOLED டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்ப்ளே கீறல் விழாத கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 

குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகின்றது. இத்தனை சிறப்பம்சங்களை சக்தியூட்ட 3200 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வை-பை, ப்ளூடூத், என்எஃப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. 

வழக்கமான வெர்டு சிறப்பம்சங்களான சஃப்பையர் கிரிஸ்டல் டிஸ்ப்ளே மற்றும் மாணிக்கத்தால் செய்யப்பட்ட வெர்டு கான்சியர்ஜ் சேவைக்கான பட்டன் மற்றும் சைலன்ட்சர்கிள் (SilentCircle) என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வெர்டு சிக்னேச்சர் டச் ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டிருந்தது.  

இத்துடன் 21 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், 2.1 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டது. மேலும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் 4ஜி, எல்டிஇ, 3ஜி, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் என்எஃப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 3160 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டன.

Similar News