தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன்களை வேகமாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்

Published On 2017-01-20 13:26 GMT   |   Update On 2017-01-20 13:27 GMT
ஸ்மார்ட்போன்களுக்கு வேகமாக சார்ஜ் செய்ய உதவும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:

லித்தியம் அயன் பேட்டரிகளை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை வேகமாக சார்ஜ் செய்ய உதவும் வழிமுறையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் பேட்டரியின் இயக்கத்தையும் மேம்படுத்த முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ரீசார்ஜ் செய்யக் கூடிய லித்தியம் அயன் பேட்டரிகள் மொபைல் போன், லேப்டாப், டேப்லெட் கணினிகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து லித்தியம் அயன் பேட்டரிகளை மின்சாதன கார்களிலும் பயன்படுத்தும் நோக்கில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மின்சக்தியை சூரியசக்தி மற்றும் காற்றில் இருந்து சேமிக்கும் திறன் கொண்டுள்ளது. 

இந்நிலையில் லண்டனின் பேத் பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோவின் இல்லினியோஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் பேட்டரிகளின் இயக்கத்தை மேம்படுத்தி அவற்றை வேகமாக சார்ஜ் செய்யும் வழிமுறையினை கண்டறிந்துள்ளனர்.  

பேட்டரியில் வேகமாக சார்ஜ் செய்ய கட்டுமான சோதனைகள் மற்றும் கணினி சிமுலேஷன்களை பயன்படுத்தி பேட்டரியின் இயக்கத்தை சோதனை செய்தனர். தொடர் ஆய்வுகளில் லித்தியம் அயன் பேட்டிரிகள் வேகமாக சார்ஜ் செய்யும் முறையை கண்டறிந்துள்ளனர். 

பேட்டரிகளில் புதிய பொருட்களை வைத்து சோதனை செய்வதன் மூலம் பேட்டரிகளின் எடை குறைவாகவும், பாதுகாப்பு மற்றும் மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் அதிசிறந்த பேட்டரிகளை கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News