தொழில்நுட்பம்

அதிக மெமரி கொண்ட உலகின் முதல் ஃபிளாஷ் டிரைவ் அறிமுகம்

Published On 2017-01-04 13:32 GMT   |   Update On 2017-01-04 13:32 GMT
உலகின் அதிக மெமரி கொண்ட யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மெமரி அளவு உள்ளிட்ட இதர தகவல்களை இங்கு பார்ப்போம்.
கலிஃபோர்னியா:

கிங்ஸ்டன் நிறுவனம் டேட்டா டிராவெல்லர் GT ஃபிளாஷ் டிரைவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. சுமார் 2000GB என்ற அளவில் உலகின் அதிக மெமரி கொண்ட ஃபிளாஷ் டிரைவ் சாதனமாக இது இருக்கிறது. புதிய யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் 1000GB மர்றும் 2000GB என இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கிங்ஸ்டன் அறிமுகம் செய்திருக்கும் இரண்டு ஃபிளாஷ் டிரைவ்களின் விநியோகம் பிப்ரவரி மாதம் துவங்கும் என்றும் இதன் விலை குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. டேட்டா டிராவெல்லர் அல்டிமேட் GT ஃபிளாஷ் டிரைவ் யுஎஸ்பி 3.1 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஃபிளாஷ் டிரைவ் சின்க்-அலாய் மெட்டல் பாடி கொண்டுள்ளதால் ஷாக் ரெசிஸ்டன்ட் அம்சம் கொண்டுள்ளது. 

புதிய டேட்டா டிராவெல்லர் அல்டிமேட் GT மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் டேட்டா அளவை அதிகரிக்க முடியும். முன்னதாக கிங்ஸ்டன் அறிமுகம் செய்த 1000GB யுஎஸ்பி டிரைவ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் புதிய சாதனத்தில் மெமரி அளவை இருமடங்கு அதிகரித்திருக்கிறோம் என கிங்ஸ்டன் நிறுவனத்தின் வியாபார பிரிவு மேலாளர் ஜீன் வோங் தெரிவித்துள்ளார். 

கிங்ஸ்டன் ஃபிளாஷ் டிரைவ் 72mmx26.94mmx21mm அளவு கொண்டுள்ளது. தற்சமயம் வெளியாகும் லேப்டாப்களிலேயே இத்தகைய மெமரி அளவு வழங்கப்படாத நிலையில் கிங்ஸ்டன் அறிமுகம் செய்துள்ள புதிய ஃபிளாஷ் டிரைவ்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Similar News