தொழில்நுட்பம்

ஜீப்ரானிக்ஸ் மல்டிமீடியா ஸ்பீக்கர்: பட்ஜெட் விலையில் அறிமுகம்

Published On 2016-12-30 11:18 GMT   |   Update On 2016-12-30 11:18 GMT
இந்தியாவில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய மல்டிமீடியா ஸ்பீக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்..
புதுடெல்லி:

இந்தியாவில் நுகர்வோர் மின்சாதனங்களை விற்பனை செய்வதில் வேகமாக வளர்ந்து வரும் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் ஆடியோ தொழில்நுட்ப பிரிவுகளில் புதிய சாதனம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், டவர் ஸ்பீக்கர்கள் மற்றும் ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு இந்திய நுகர்வோரிடம் இருந்து தேவை அதிகரித்து வரும் நிலையில், ஜீப்ரானிக்ஸ் சமீப காலமாக பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. 

அந்த வகையில் ஜீப்ரானிக்ஸ் 2.2 மல்டிமீடியா ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ZEB-BT361RUCF என அழைக்கப்படும் இந்த 2.2 ஸ்பீக்கர் அனைவரின் கண்களையும் கவரும், என்பதோடு துள்ளலான இசையை கேட்கும் போதும், திரைப்படத்தைப் பார்க்கும் இசைப்பிரியர்களின் மனதைக் கவர்வதாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய ஸ்பீக்கர்களுடன் துணை ஸ்பீக்கர்கள் மற்றும் ஊஃப்பருக்கு வழங்கப்பட்டுள்ள மரப்பெட்டி அமைப்பு – இசைப்பிரியர்கள் பொதுவாக எதிர்பார்க்கும் உறுதியையும் நேர்த்தியான தோற்றத்தையும் இதற்கு வழங்கும். ஒரே பெட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு 4-அங்குல சப்வூஃப்பர் டிரைவர்கள் அறைக்குள் திரையரங்கம் போன்ற சூழ்நிலையை உருவாக்கும் என்று ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் தோஷி தெரிவித்தார். 

ஜீப்ரானிக்ஸ் புதிய ஸ்பீக்கரில் ப்ளூடூத் இணைப்பு, USB போர்ட், எஸ்டி சப்போர்ட் மற்றும் உள்ளமைக்கப்பட்ட FM டியூனருடன் வருகிறது. இதன் ஒவ்வொரு துணை ஸ்பீக்கர்கள் 12W வெளிப்பாட்டினை வழங்குகின்றன; இது சரியான அளவு பேஸ் மற்றும் உயர்ந்த ட்ரிப்பில் இசையின் சிறந்த கலவையை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது.

LED காட்சித்திரையுடன் பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பட்டன்கள், இதன் மல்ட்டிமீடியா கட்டுப்பாடுகளை நிர்வகிக்க உதவி செய்கிறது. ஒலியளவு, பேஸ் மற்றும் ட்ரிப்பில் ஆகியவை பணிச்சூழலியல் முறைப்படி சப்வூஃபருக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2.2 ஸ்பீக்கர் ஒரு ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இதன் மூலம் அனைத்தையும் தூரத்தில் இருந்தே இயக்க முடியும்.

ஜீப்ரானிக்ஸ் 2.2 மல்டிமீடியா ஸ்பீக்கர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.4242 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Similar News