மொபைல்ஸ்

50MP பிரைமரி கேமராவுடன் ரூ. 13 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான சாம்சங் ஸ்மார்ட்போன்

Update: 2022-10-03 15:12 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
  • புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் வழங்கப்பட்டு உள்ளன.

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி A04s ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் எக்சைனோஸ் 850 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் கேலக்ஸி A04s ஸ்மார்ட்போன் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. மேலும் சாம்சங் ரேம் பிளஸ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தாமல் உள்ள ஸ்டோரேஜை பயன்படுத்திக் கொள்ளும்.

சாம்சங் கேலக்ஸி A04s அம்சங்கள்:

6.5 இன்ச் FHD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் எக்சைனோஸ் 850 பிராசஸர்

4 ஜிபி ரேம்

சாம்சங் ரேம் பிளஸ் அம்சம்

64 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

50MP பிரைமரி கேமரா

2MP மேக்ரோ சென்சார்

2MP டெப்த் சென்சார்

5MP செல்பி கேமரா

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒன் யுஐ கோர் 4.1

டால்பி அட்மோஸ் ஆடியோ

4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

5000 எம்ஏஹெச் பேட்டரி

15 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி A04s ஸ்மார்ட்போன் பிளாக், காப்பர் மற்றும் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை சில்லறை விற்பனை மையங்கள், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் நடைபெறுகிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 கேஷ்பேக் பெற முடியும்.

Similar News