ரெட்மி நோட் 12 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு
- சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் சீரிசாக ரெட்மி நோட் 12 விளங்குகிறது.
- புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி புக் ஏர் 13 மாடலும் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு டீசர்களை தொடர்ந்து சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இத்துடன் சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய 200MP கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் பெறும் என சியோமி தெரிவித்து இருக்கிறது.
புதிய 200MP சென்சார் 1/1.4 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது சூப்பர் QPD ஆட்டோபோக்கஸ் வசதி உள்ளது. இத்துடன் 16 இன் 1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் உள்ளது. இந்த சென்சார் உள்ள இதர அம்சங்கள் அதிகபட்சம் 4 ட்ரில்லியன் நிறங்களை பிரதிபலிக்க செய்கிறது. இதில் HDR மற்றும் 8K வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 12 ப்ரோ டீசரின் படி இந்த ஸ்மார்ட்போன் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புது ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி சியோமி புக் ஏர் 13 நோட்புக் மாடலையும் சியோமி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.