மொபைல்ஸ்

210 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ்

Published On 2022-10-28 09:50 IST   |   Update On 2022-10-28 09:50:00 IST
  • சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
  • இவற்றில் ஒரு மாடலில் 200MP கேமரா, 210 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரெட்மி நோட் 12 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மற்றும் ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றில் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எம்ஐயுஐ 13, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளன.

சீன சந்தையில் ரெட்மி நோட் 12 ப்ரோ விலை RMB 1699 இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 380 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை RMB 2099 இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 900 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் விலை RMB 2099 இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை RMB 2299 இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரத்து 200 ஆகும்.

ரெட்மி நோட் 12 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் அம்சங்கள்

6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே

மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்

8 ஜிபி, 12 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எம்ஐயுஐ 13

200MP பிரைமரி கேமரா

8MP அல்ட்ரா வைடு கேமரா

2MP மேக்ரோ கேமரா

16MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி போர்ட்

4300 எம்ஏஹெச் பேட்டரி

210 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் 12 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

6.67 இன்ச் FHD+OLED டிஸ்ப்ளே

மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்

நோட் 12 ப்ரோ: 6 ஜிபி, 8 ஜிபி, 12 ஜிபி ரேம்

128 ஜிபி, 256 ஜிபி மெமரி

நோட் 12 ப்ரோ பிளஸ்: 8 ஜிபி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எம்ஐயுஐ 13

நோட் 12 ப்ரோ பிளஸ்: 200MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு, 2MP மேக்ரோ கேமரா

நோட் 12 ப்ரோ: 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு, 2MP மேக்ரோ கேமரா

16MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத்

யுஎஸ்பி டைப் சி போர்ட்

நோட் 12 ப்ரோ: 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் பாஸ்ட் சார்ஜிங்

நோட் 12 ப்ரோ பிளஸ்: 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங்

Tags:    

Similar News