மொபைல்ஸ்

பட்ஜெட் விலையில் ENC, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல வசதிகள்... புது இயர்பட்ஸ் அறிமுகம்

Published On 2025-08-23 08:56 IST   |   Update On 2025-08-23 08:56:00 IST
  • அதிவேக சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்களில் 150 நிமிடங்கள் பயன்படுத்த முடியும்.
  • புதிய ப்ரோபட்ஸ் Wave 921 நெக்பேண்ட், டூயல்-டோன் சிலிகான் பில்டு கொண்டிருக்கிறது.

லாவா நிறுவனத்தின் ஆடியோ பிரிவான ப்ரோபட்ஸ் இந்சிய சந்தையில் இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்து அதன் தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்தியுள்ளது. இவை ப்ரோபட்ஸ் Aria 911 மற்றும் ப்ரோபட்ஸ் Wave 921 என அழைக்கப்படுகின்றன.

ப்ராபட்ஸ் Aria 911

புதிய ப்ரோபட்ஸ் Aria 911 டூயல் டோன் டிசைன் மற்றும் காதுகளில் பாதுகாப்பாக பொருத்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது 10mm டிரைவர்களை கொண்டுள்ளது. மேலும் பல்வேறு வகைகளில் அதிவேக ஆடியோவை வழங்க டியூன் செய்யப்பட்ட சவுண்ட் பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) வசதி வழங்கப்பட்டுள்ளது. இது அழைப்புகளின் போது குரல் தெளிவாக கேட்பதை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் 50ms வரை லோ லேடன்சி கேமிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த இயர்பட்ஸ் ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IPX6 தரச்சான்று பெற்று இருக்கிறது. மேலும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் 35 மணிநேரம் வரை பிளேபேக் வழங்குகிறது. அதிவேக சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்களில் 150 நிமிடங்கள் பயன்படுத்த முடியும். கூடுதல் அம்சங்களில் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் டச் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது.

ப்ராபட்ஸ் Wave 921

புதிய ப்ரோபட்ஸ் Wave 921 நெக்பேண்ட், டூயல்-டோன் சிலிகான் பில்டு கொண்டிருக்கிறது. இந்த நெக்பேண்ட் நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கான சூழலியல் வடிவமைப்புடன் வருகிறது. இது இசை மற்றும் கேமிங் என இரண்டிற்கும் ஏற்ற, ஆழமான பாஸ் மற்றும் தெளிவான டிரெபிளை உருவாக்கும் 10 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டுள்ளது. ENC சத்தமில்லாத சூழல்களில் அழைப்பு தெளிவை உறுதி செய்கிறது, மேலும் 50ms லோ லேடன்சி அசத்தலான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த நெக்பேண்ட் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டுள்ளது. இதற்காக இந்த மாடல் IPX6 தரச்சான்று பெற்றுள்ளது. மேலும், இதில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 மணிநேரம் வரை பிளேபேக் வழங்குகிறது. அதே நேரத்தில் அதிவேகமான சார்ஜிங் மூலம், வெறும் 10 நிமிடங்களில் 12 மணிநேர பிளேபேக் வழங்குகிறது.

இந்திய சந்தையில் புதிய ப்ரோபட்ஸ் Aria 911 இயர்பட்ஸ் மற்றும் Wave 921 நெக்பேண்ட் ஒவ்வொன்றும் ரூ. 999 அறிமுக விலையில் கிடைக்கின்றன, அதே நேரத்தில் அவற்றின் வழக்கமான விலைகள் முறையே ரூ. 2499 மற்றும் ரூ. 2999 ஆகும். இரண்டு மாடல்களும் அமேசான் மற்றும் லாவா இந்தியா இ-ஸ்டோர்களில் ஆகஸ்ட் 25, 2025 முதல் விற்பனை செய்யப்படும்.

Tags:    

Similar News