மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன் - அசத்தல் டீசர் வெளியீடு!

Published On 2023-07-31 08:18 GMT   |   Update On 2023-07-31 08:18 GMT
  • இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • ஒப்போ A78 4ஜி மாடல் அக்வா கிரீன், மிஸ்ட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒப்போ இந்தியாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுன்டில் ஒப்போ A78 ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் மாத துவக்கத்திலேயே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஒப்போ A78 4ஜி மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ், 50MP டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ A78 4ஜி அம்சங்கள்:

6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

அட்ரினோ GPU

8 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

ஆன்ட்ராய்டு 13 சார்ந்த கலர்ஒஎஸ் 13.1

50MP பிரைமரி கேமரா

2MP டெப்த் கேமரா

8MP செல்ஃபி கேமரா

4ஜி, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்

யுஎஸ்பி டைப் சி போர்ட்

5000 எம்ஏஹெச் பேட்டரி

67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

சமீபத்தில் இந்த ஒப்போ A78 4ஜி வெர்ஷன் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி ஒப்போ A78 4ஜி வெர்ஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 600 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஒப்போ A78 4ஜி மாடல் விலை ரூ. 18 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்திய சந்தையில் ஒப்போ A78 4ஜி மாடல் அக்வா கிரீன், மிஸ்ட் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என்று டீசர்களில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News