தொழில்நுட்பம்

6100 எம்ஏஎச் பேட்டரி கொண்ட சியோமி Mi பேட் 3 அறிமுகம்

Published On 2017-04-06 11:39 GMT   |   Update On 2017-04-06 11:39 GMT
சியோமி நிறுவனத்தின் Mi பேட் 3 டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக சக்திவாய்ந்த பேட்டரி வழங்கப்பட்டுள்ள புதிய டேப்லெட்டின் முழு சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:

சியோமி நிறுவனம் தனது புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. Mi பேட் 3 என பெயரிடப்பட்டுள்ள புதிய டேப்லெட் 1499 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,139 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டேப்லெட் விரைவில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

முன்னதாக சியோமியின் முதல் டேப்லெட் சாதனம் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்சமயம் வெளியிடப்பட்டுள்ள Mi பேட் 3 டேப்லெட்டில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

சிறப்பம்சங்களை பொருத்த வரை 2.1 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT8176 பிராசஸர், ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.    

இத்துடன் 6100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, வை-பை டிஸ்ப்ளே, வை-பை டைரக்ட், ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 

சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Mi பேட் 3 இந்தியாவில் வெளியாவது குறித்து சியோமி சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

Similar News