தொழில்நுட்பம்

குறிப்பிட்ட காலத்திற்கு இருமடங்கு சன்மானம்: மைக்ரோசாப்ட் தாராளம்

Published On 2017-03-07 15:43 GMT   |   Update On 2017-03-07 15:43 GMT
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சேவையில் பிழைகளை எடுத்துரைக்கும் ஹேக்கர்களுக்கு இதுவரை வழங்கி வந்த சன்மானத்தை குறிப்பிட்ட காலத்திற்கு இருமடங்கு வரை உயர்த்தியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகம் முழுக்க வழங்கி வரும் சேவைகளில் பிழைகளை கண்டறிந்து தகவல் வழங்கும் ஹேக்கர்களுக்கு அந்நிறுவனம் குறிப்பிட்ட அளவு சன்மானம் வழங்கி வருகிறது. குறைந்த பட்சம் 500 டாலர்கள் முதல் அதிகபட்சம் 15000 டாலர்கள் வரை வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் மார்ச் 1 முதல் மே 1 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் வரை ஹேக்கர்கள் மைக்ரோசாப்ட் சேவைகளில் கண்டறியும் பிழைகளில் உண்மையென மைக்ரோசாப்ட் உறுதி செய்யும் பட்சத்தில் இருமடங்கு சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக உறுதி செய்யப்படும் பிழைகளின் மூலம் ஹேக்கர்கள் அதிகபட்சம் 30,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.19,99,395 வரை சன்மானமாக பெற முடியும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. எனினும் மைக்ரோசாப்ட் வழங்கும் சன்மானம் ஹேக்கர் தெரிவிக்கும் பிழையை பொருத்தது ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News