தொழில்நுட்பம்

வளர்ந்து வரும் இண்டர்நெட் உலகில் பாதுகாப்பு வழங்கும் கேஸ்பர்ஸ்கை இயங்குதளம் அறிமுகம்

Published On 2017-02-21 21:45 GMT   |   Update On 2017-02-21 21:45 GMT
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சார்ந்த பயன்பாடு அதிகரித்து வருவதால், இணைவாசிகள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் புதிய இயங்குதளம் ஒன்றை கேஸ்பர்ஸ்கை அறிமுகம் செய்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

சைபர் பாதுகாப்பு சார்ந்த பிரபல நிறுவனமான கேஸ்பர்ஸ்கை புதிய இயங்குதளம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கேஸ்பர்ஸ்கை ஓஎஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளம் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ், நெட்வொர்க் சாதனங்களில் வேலை செய்யும் படியும், தொழில்துறை இயக்கம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். 

கேஸ்பர்ஸ்கை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களில் இந்த இயங்குதளத்தை 14 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 11-11 என பெயரிடப்பட்டிருந்தது. நவம்பர் 11 ஆம் தேதி இந்த இயங்குதள பணிகள் எடுக்கப்பட்டதால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாதுகாப்பற்ற சாதனங்களின் பாதுகாப்பை அதிகபடுத்தவே இந்த இயங்குதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேஸ்பர்ஸ்கை ஓஎஸ் அல்லது கேஸ்பர்ஸ்கை இயங்குதளம் விண்டோஸ், மேக் ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News