தொழில்நுட்பம்

பிப்ரவரி 26இல் சாம்சங் புதிய டேப்லெட் அறிமுகம்?

Published On 2017-02-02 00:16 GMT   |   Update On 2017-02-02 00:16 GMT
சாம்சங் நிறுவனம் புதிய டேப்லெட் சாதனம் பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியோல்:

இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சாம்சங் நிறுவனம் களமிறங்க இருப்பதை உறுதி செய்துள்ளது. அதன் படி பிப்ரவரி 26 ஆம் தேதி புதிய சாதனத்தை வெளியிட இருப்பதை சாம்சங் பத்திரிக்கை அழைப்புகளின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

சாம்சங் அழைப்பிதழின் படி வெளியாக இருக்கும் சாதனம் டேப்லெட் தான் என்பதை உறுதி செய்துள்ளது. சாம்சங் இணையத்திளத்தில் நேரலை செய்யப்பட இருக்கும் இந்த விழா பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு துவங்க இருக்கின்றது. வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சாம்சங் சாதனத்தில் ஹோம் பட்டன் இருப்பது மற்றும் டேப்லெட் சாதனம் தான் எனப்தும் தெரியவந்துள்ளது.

அழைப்பிதழ் வெளியானதில் இருந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் S3 சாதனத்தை வெளியிடும் என கூறப்பட்டு வருகின்றது. இந்த சாதனம் கேலக்ஸி டேப் S2 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.   

சிறப்பம்டங்களை பொருத்த வரை சாம்சங் டேப்லெட்டில் 9.7 இன்ச் 2048x1536 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 820 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இத்துடன் 12 எம்பி பிரைமரி கேமரா மற்றும் வை-பை மற்றும் எல்டிஇ மாடல்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை 600 டாலர்கள் அகாவகது இந்திய மதிப்பில் ரூ.41,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி டேப் S2 சாதனத்தில் 8.0 இன்ச் மற்றும் 9.7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. இரு மாடல்களும் மெலியதாகவும் எடை குறைவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News