தொழில்நுட்பம்

மாணவர்களுக்கென பிரத்தியேக டெல் லேப்டாப்கள் அறிமுகம்

Published On 2017-01-25 13:32 GMT   |   Update On 2017-01-25 13:32 GMT
டெல் நிறுவனத்தின் புதிய லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென பிரத்தியேக பதிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:

டெல் நிறுவனத்தின் புதிய Latitude மற்றும் குரோம்புக் நோட்புக் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பிரத்தியேக பதிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய சாதனங்களில் 2 இன் 1 ஸ்டான்டர்டு நோட்புக் மற்றும் Latitude சீரிஸ் குரோம்புக் உள்ளிட்டவை அடங்குகின்றது. 

டெல் Latitude 11 கன்வேர்டிபில் மற்றும் குரோம்புக் 11 கன்வேர்டிபில் சாதனங்கள் டெல் நிறுவனத்தின் புதிய மாடல்கள் ஆகும். இந்த லேப்டாப்களை மடித்து டேப்லெட் போன்றும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பயன்படுத்த ஏதுவாக கடினமானதாகவும், கீறல் விழாத கிளாஸ் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது. 

மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை செல்ஃபி கேமரா, வீடியோ பதிவு செய்யும் வசதி, Latitude மாடலில் இன்டெல் கேபி லேக் செலரான் அல்லது பென்டியம் பிராசஸர் மற்றும் குரோம்புக் மாடலில் 6 ஆம் தலைமுறை இன்டெல் செலரான் சிபியு வழங்கப்படுகிறது. 

புதிதாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெல் சாதனங்களில் MIL-STD-810g தர வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, வை-பை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ மற்றும் யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.    

விலையை பொருத்த வரை 11 இன்ச் கன்வேர்டபில் லேப்டாப் விண்டோஸ் மாடல் $579 அதாவது இந்திய மதிப்பில் ரூ.39,400, குரோம் இயங்குதளம் கொண்ட பதிப்பு $349 அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்டர்டு மாடல்களான Latitude 11 $349 அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,800, குரோம்புக் 11 $219 அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000 மற்றும் Latitude 13 $299 அதாவது இந்திய மதிப்பில் ரூ.21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Similar News