தொழில்நுட்பம்

ஐபால் 4ஜி டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2017-01-24 13:20 GMT   |   Update On 2017-01-24 13:20 GMT
ஐபால் நிறுவனத்தின் புதிய 4ஜி டேப்லெட் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை விரிவாக பார்ப்போம்.
புதுடெல்லி:

ஐபால் நிறுவனம் இந்தியாவில் புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. Slide Nimble 4GF என பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்லெட் இந்தியாவில் ரூ.9,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கும் இந்த டேப்லெட்டில் 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை ஐபால் Slide Nimble 4GF 8 இன்ச் 12800x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் சிப்செட் மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ள Slide Nimble 4GF டேப்லெட் 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி வோல்ட்இ, 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. 21 மொழிகளை இயக்க வழி செய்யும் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் ஐபால் நிறுவனத்தின் Slide Q27 4G டேப்லெட் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த டேப்லெட் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16ஜிபி இன்டெர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ள இந்த டேப்லெட் 5 எம்பி பிரைமரி கேமராவும் 2 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.  

இதன் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை, ப்ளூடூத், USB OTG, வை-பை டைரக்ட் போன்றவை உள்ளன. 5500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. டூயல்-சிம் ஸ்லாட் கொண்டுள்ள இந்த டேப்லெட் இரு ஸ்லாட்டிலும் 4ஜி வசதியை வழங்குகின்றது. 

Similar News