தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட புதிய எல்ஜி டேப்லெட்

Published On 2017-01-19 12:53 GMT   |   Update On 2017-01-19 12:53 GMT
எல்ஜி நிறுவனம் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட புதிய டேப்லெட் சாதனத்தை உருவாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியோல்:

எல்ஜி நிறுவனம் புதிய டேப்லெட் சாதனத்தை இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி புதிய டேப்லெட் சாதனத்தில் வழங்கப்பட இருக்கும் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

ப்ளூடூத் மற்றும் வைபை தொழில்நுட்பத்திற்கான சான்றளிக்கும் இணையத்தில் காணப்பட்ட புதிய எல்ஜி டேப்லெட் குறித்த தகவல்களில் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படலாம் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து வெளியான தகவல்களில் புதிய எல்ஜி டேப்லெட் LG-P451L என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் புதிய ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் சந்தையில் ரூ.40,899 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

எல்ஜியின் புதிய டேப்லெட் சாதனத்தின் மற்ற சிறப்பம்சங்கள் அறியப்படாத நிலையில் இந்த சாதனத்தின் அறிமுக தேதியும் மறைமுகமாகவே வைக்கப்பட்டுள்ளது.

Similar News