தொழில்நுட்பம்

அசுஸ் ROG GT51CH கேமிங் கணினி அறிமுகம் செய்யப்பட்டது

Published On 2017-01-04 15:02 GMT   |   Update On 2017-01-04 15:02 GMT
அசுஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் கணினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கணினியின் முழு அம்சங்களை இங்கு பார்ப்போம்..
சான்பிரான்சிஸ்கோ:

சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் முக்கிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்த வகையில் அசுஸ் நிறுவனம் இன்று தனது சக்திவாய்ந்த கேமிங் கணினியை அறிமுகம் செய்துள்ளது. 
 
அசுஸ் கேமிங் கணினிகளின் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கணினிக்கு ROG GT51CH என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கணினி விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் 7 ஆம் தலைமுறை இன்டெல் கோர் i7 பிராசஸர் மூலம் சக்தியூட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கணினியானது NVIDIA SLI தொழில்நுட்பம் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கணினியில் ஒரே சமயத்தில் இரண்டு கிராஃபிக் கார்டுகளை சேர்க்க முடியும். இத்துடன் அசுஸ் ROG GT51CH கணினியில் Aegis III செயலி ROG பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணினியின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு பிராசஸர் வேகத்தையும் சீராக வைக்க முடியும். 

அசுஸ் அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த கேமிங் கணினியில் XMP தொழ்ல்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மெமரியை கட்டுப்படுத்தி கணினியின் செயல்பாட்டை 17% வரை அதிகரிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்துடன் இன்டெக்ஸ் Z270 சிப்செட் மற்றும் கேபி லேக் இன்டெல் கோர் i7 7700K பிராசஸர், 3 tbs கொண்ட SATA 6Gbps HDD ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்படுகிறது. 
  
அசுஸ் ROG GT51CH கேமிங் கணினியில் அசுஸ் ஔரா லைட்டிங் அம்சங்கள் மூலம் கணினியில் வழங்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகளை மிளிர செய்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த எல்இடி விளக்குகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News