தொழில்நுட்பம்

விண்டோஸ் இயங்குதளம் கொண்ட சாம்சங் சாதனம்: அடுத்த வராம் அறிமுகம்?

Published On 2016-12-30 15:00 GMT   |   Update On 2016-12-30 15:01 GMT
அடுத்த வாரம் நடைபெற இருக்கும் சர்வதேச விழாவில் சாம்சங் நிறுவனம், விண்டோஸ் இயங்குதளம் கொண்ட சாதனத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:  

சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா இன்னும் சில தினங்களில் தினங்களில் துவங்க உள்ளது. இந்த விழாவில் சாம்சங் பல்வேறு சாதனங்களை வெளியிட இருக்கும் நிலையில் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய டேப்லெட் வகைகளை சாம்சங் அறிவிக்க இருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சாம்சங் புதிய டேப்லெட் சாதனங்கள் SM-W720 மற்றும் SM-W620 என்ற பெயரில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த டேப்லெட் சாதனங்கள் சார்ந்த மற்ற தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. SM-W720 டேப்லெட் சாதனம் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் கேலக்ஸி டேப் ப்ரோ S (SM-W700) மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.  

சாம்சங் டேப்லெட் SM-W620 மாடல் SM-W720 டேப்லெட்டின் சிறிய ரக மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இதே விழாவில் சாம்சங் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட் டிவி சாதனங்களை வெளியிடும் என சமீபத்தில் அறிவித்தது. இவற்றின் சேவைகள் சாம்சங் ஸ்மார்ட் ஹப் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   

விளையாட்டு பிரியர்களுக்கு விளையாட்டுக்கள் சார்ந்த நிகழ்ச்சிகளின் தகவல்கள் வழங்கப்படும் என்றும் இவை அனைத்தும் பிரத்தியேகமாக 'Sports' என்ற யூஸர் இன்டர்ஃபேஸ் கீழ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் இப்பிரிவில் வழங்கப்படும் சேவைகள் நீட்டிக்க இருப்பதாக கூறப்படுகிறது.      

விளையாட்டு போன்றே மியூசிக் பிரிவின் கீழ் லைவ் டிவியில் இருந்து பாடல்களை தேட முடியும். ஸ்மார்ட் ஹப் மூலம் பிரீவியூ ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் புதுவித இசையை தேட முடியும். தற்சமயம் வரை எட்டு இசை சார்ந்த செயலிகளின் சேவை இதில் வழங்கப்படுகிறது.

Similar News