தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 19 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் பரப்புரை தேதி அறிவிப்பு.!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல்.

செப்.25ல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும். அக்.2 ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் மேற்கொள்கிறார்.

மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

* த.வெ.க.வின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

* கையில் வைத்த மை காய்வதற்கு முன்னமே ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள்.

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்.. ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி!

*துணைத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட தீபான்சு வெற்றி பெற்றுள்ளார்.

*கடந்த ஆண்டும் தலைவர், செயலாளர், துணை செயலாளர் பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியிருந்தது

மதுராந்தகத்தில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்: ஆதவ் அர்ஜுனா பேச்சு

* இடைத்தேர்தலிலும் வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டோம் என்றார்.

* மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் 2 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.

சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்.

சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு விளக்கம் தேவை என்று பாஜக தலைவர் வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றுவது, அதனை தனியாருக்கு ஒப்படைப்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.

வரலாற்றில் இன்று: ஓரே ஓவரில் ஆறு சிக்ஸ்ர்கள் அடித்து சாதனை படைத்த யுவராஜ் சிங்.!.

யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த அதிரடியான ஆல் ரவுண்டர்களில் திகழ்ந்தவர்களில் ஒருவர் ஆவார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதே தினத்தில் யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை ப்டைத்தார்.

பொலியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்..!

பொலிவியாவின் அடர்ந்த யுங்காஸ் மேகமூட்டக் காடுகளில் மறைந்திருந்த புதிய சிறிய காட்டுப்பூனையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வீட்டுப் பூனைகளை விடச் சிறியதுமான அந்த காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த விலங்கிற்கு லியோபார்டஸ் டில்காயோ என பெயரிடப்பட்டுள்ளது.

கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டு: தேசியக்கொடி ஏந்தி வந்த மனு பாக்கர், பவன் ஷெராவத்

* கடந்த ஆசிய போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.

* இதில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் அடங்கும்.

தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்காமல் இருக்கும் வக்கற்ற அரசு, நீதி கேட்டால் ஒடுக்குவதா? - கனிமொழி கண்டனம்.

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

கொலைகளுக்கு நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வது கண்டனத்திற்குரியது.

"2030-க்குள் ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும்" - NVIDIA சி.இ.ஓ ஜென்சன் சொல்வது என்ன?

*செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான முயற்சிகளை, அதன் வளர்ச்சி வேகம் மிஞ்சிவிடக்கூடும்

*முழுமையாகத் தயாராகாத மற்றும் பாதுகாப்பற்ற ஏஐ மாடல்கள் சந்தைக்குக் கொண்டுவரப்படக்கூடாது

தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!- சிபிஐ(எம்) வலியுறுத்தல்

* அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும்.

* சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

* த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

* புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் திருவான்மியூரில் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

* காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

* திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி ஆகி உள்ளது.

திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்

* போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.

* திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை.

டெங்குவை தடுக்கவும், குணமடையவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!- அன்புமணி

* டெங்கு காய்ச்சல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன.

* டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்.

சோதனை மேல் சோதனை.. மம்தா அறிவித்த மற்றொரு வேட்பாளரும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு - அடுத்த நடந்த டுவிஸ்ட்

* கிளர்ச்சி அணியின் ரிதர்பா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.


*மம்தா தரப்பினர் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மிரட்டப்படுகிறார்கள்

இடைத்தேர்தல் பிரசாரம்: த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேருக்கு அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்

* தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

* 2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்கிறது திமுக - அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு

* திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.

* வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.

சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்- வலுக்கும் கண்டனம்

* தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.

* மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது இயல்பான பழக்கமாகவே இருக்க வேண்டும் - ஆளுநர் அர்லேகர்

* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம்.

* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.

குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

* குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன.

* திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?

அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்!

* ஐஐடி பாம்பேயில் ChatGPT பயன்படுத்திய மாணவர் தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

* நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது, மாணவர்கள் மிரட்டல் தான் காரணம் என போராட்டம்.

வெள்ளை மாளிகையில் சில செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த டிரம்ப்...

* அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் மூன்று செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளார்.

* இந்த நிறுவனங்கள் போலி செய்திகளை வெளியிட்டு வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT