சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

சென்னை விமான நிலையம் தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
Vanathi Srinivasan
Published on

தனியாருக்கு ஒப்படைப்பா ?

சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றுவது, அதனை தனியாருக்கு ஒப்படைப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள செய்து குறிப்பில் தற்போதைய செயல்பாட்டில் குறைபாடுகள் இருப்பதாகவும் ,அதற்காக நிர்வாகத்தை மாற்றுவதற்கு மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றத்திற்கு பெ.சண்முகம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு விளக்கம் தேவை என்று பாஜக தலைவர் வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது

வரலாற்றுச் சிறப்பு மிக்க, பழமை வாய்ந்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய AAI நிர்வாகத்தை மாற்றி வேறு ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது?

சென்னை விமான நிலையம் கடந்த 2024–25 அறிக்கையின் படி சுமார் 2.24 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டு லாப வருவாயுடன் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

தெளிவான விளக்கம் வேண்டும்

இதுமட்டுமன்றி தற்போது விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக ரூ. 2,467 கோடி நிதியில் வளர்ச்சித் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது. இப்படி தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுவதிலும், சரக்குகள், பயணிகளைக் கையாள்வதிலும் சிறப்புடன் செயல்பட்டுவரும் AAI நிர்வாகத்தினை மாற்ற வேண்டிய அவசியம் தவெக அரசுக்கு என்ன? இதுகுறித்து மக்களுக்கு தெளிவான விளக்கத்தை முதல்வர் தரப்பிலிருந்து தரவேண்டியது கடமை.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்ட கடிதம எனது தற்போது வெளிவந்திருப்பதன் கால தாதமம் ஏன்? ஏற்கனவே பரந்தூர் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு தமிழகத்தை 10 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய தவெக அரசு அடுத்து பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் கைவைத்திருப்பது இந்த அரசு உண்மையாகவே மக்களுக்கான அரசாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.

கடிதத்தை வாபஸ் பெற வேண்டும்

சென்னை விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பான எந்த முடிவும் பயணிகள் நலன், ஊழியர்கள் நலன், பொதுத்துறை முதலீடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே எடுக்கப்பட வேண்டும். முதல்வர் விஜய் அவர்கள் அனுப்பிய இக்கடிதத்தினை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

என இவ்வாறு தெரிவித்துள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com