பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்கிறது திமுக - அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.
Minister Vanni Arasu
Published on
Summary

பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது என்று அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மாணவர் பாரதிதாசன் தற்போது வரை பில் அனுப்பாத நிலையிலும் முழு உதவித்தொகையையும் தவெக அரசு அனுப்பி விட்டது.

* திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட வழிமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது.

* திமுக அரசு கேட்டதைப்போல் தான் தற்போது தவெக அரசும் உதவித்தொகைக்கான பில் உள்ளிட்டவற்றை கேட்கிறது.

* திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.

* திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வித்தொகைக்கு விண்ணப்பித்த 609 பேரில் 601 பேர் தகுதி பெற்றும் 181 பேருக்கு மட்டும் திமுக உதவித்தொகை கொடுத்தது ஏன்?

* பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது.

* மாணவர் பாரதிதாசனுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

* மாணவன் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரத்தில் திமுக தான் அரசியல் செய்கிறது.

* திமுக ஆட்சி காலத்தில் நடந்த கவின் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி அரசியல் செய்வது திமுக தான்.

* கவின் ஆணவப்படுகொலை விவகாரத்தில் விசிக போராடிய பிறகே சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.

* கவின் படுகொலை விவகாரத்தில் விசிக தான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது.

* வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே எப்ஐஆர் போட்டது திமுக அரசு. பாதிக்கப்பட்டோர் மீது எப்படி வழக்கு பதிவீர்கள் என ஸ்டாலினை சந்தித்து கேள்வி எழுப்பினோம்.

* வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com