

தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் கூறினார்.
சர்வதேச கடற்கரை தூய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச கடற்கரை தூய்மை தினமான இன்று சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆளுநர் அர்லேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம்.
* மெரினா கடற்கரையை சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
* இருப்பினும், உலகம், நாடு மற்றும் மாநிலம் முழுவதும் ‘கடற்கரை தூய்மைப்படுத்தும் நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், நாம் மீண்டும் இங்கு கூடியுள்ளோம்.
* கடற்கரை, சுற்றுப்புறம், வீடுகளை தூய்மையாக வைத்திருப்பது நமது இயல்பான பழக்கமாகவே இருந்திருக்க வேண்டும்.
* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.