

யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த அதிரடியான ஆல் ரவுண்டர்களில் திகழ்ந்தவர்களில் ஒருவர் ஆவார். குறிப்பாக இந்திய அணிக்காக 17 அண்டுகள் சரவதேச அரங்கில் விளையாடியிருக்கிறார்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களுக்கும் மேல் எடுத்திருக்கிறார். பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் யுவராஜ் சிங் பத்மஶ்ரீ, அர்ஜுனா விருதுகளை பெற்றிருகிறார்
இவ்வாறான சாதனைகளை படைத்த யுவராஜ் சிங்கிற்கு 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதே தினத்தில் யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை படைத்தார்.
மேலும் இதே போட்டியில் வெறும் 12 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து உலக வரலாற்றில் மறக்க முடியாத சாதனை படைத்தார்
2007-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்
இந்திய அணியின் தொடக்க வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர்.18 ஓவர்கள் முடிவில் இந்தியா 171 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது யுவராஜ் சிங் களத்தில் இருந்து சிக்ஸர்களை விளாசினார்.
யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் ம் குறைந்த பந்துகளில் அரைசதம், அதாவது சர்வதேச டி 20 வரலாற்றில் அதிவேக அரைசதம் மற்றும் 16 பந்துகளில் 58 ரன்கள் அகியவற்றை குவித்து வரலாற்று சாதனை படைத்தார்.
இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்தியா 200 ரன்களைக் கடந்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. இந்த அதிரடியான ஆட்டத்தின் மூலம் யுவராஜ் சிங்கை வரலாறு இன்றும் நினைவுகூறுகிறது.