

பொலியாவின் மேகமூட்ட யுங்காஸ் காட்டில் 100 ஆண்டுகளுக்கு பின் புதிய பூனை இனத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 3 பவுண்டு எடை கொண்டதும், பல வீட்டுப் பூனைகளை விடச் சிறியதுமான அந்த காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த விலங்கிற்கு லியோபார்டஸ் டில்காயோ என பெயரிடப்பட்டுள்ளது.
டில்காயோ பூனை பார்ப்பதற்கு சிறுத்தையை போன்று தோற்றமளித்தாலும் அளவில் சிறியதாகவே இருக்கிறது. சுமார் 46 செ.மீ. நீளம் கொண்ட இந்த பூனை, ஏறத்தாழ 1.4 கிலோ எடை கொண்டுள்ளது. இதனால் சராசரி வீட்டு பூனையை விடவும் சிறியதாக உள்ளது. இதன் உடல் வெளிர் பழுப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் காணப்படுகிறது.
இந்த பூனை இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்குவதாகவும், சிறிய கொறித்துண்ணிகளை உணவாக கொள்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகக் குறைவான உயிரினங்களே இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதால், அதன் நடத்தை பற்றி மிகக் குறைவாகவே அடையாளம் காண முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூனை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் பார்வைக்கு அருகிலேயே இருந்தாலும், ஏற்கனவே அறியப்பட்ட மற்றொரு டைகர் கேட் இனத்தைச் சேர்ந்ததாகவே இந்த பூனையை நினைத்துக்கொண்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
போலிவியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் இருந்த ஒரு பூனையை ஆய்வு செய்தபோது விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தென் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 38 பூனைகளின் மரபணு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்ட மாதிரிகளும் இடம்பெற்றன.
மரபணு ஆய்வின் முடிவில், டில்காயோ மற்ற டைகர் கேட் இனங்களில் இருந்து சுமார் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தனித்த பரிணாமப் பாதையில் இருந்தது தெரியவந்துள்ளது
இந்த நிலையில் புதிதாக கண்டறியப்பட்ட இந்த லியோபார்டஸ் டில்காயோ பூனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுடன் வாழ்ந்து வரும் வீட்டுப் பூனைகளைப் போலல்லாமல், டில்காயோ என்பது மரபணு ரீதியாக வேறுபட்ட ஒரு காட்டு இனமாகும்.
இது மற்ற புலிப் பூனைகளிடமிருந்து சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளாகத் தனியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன.