தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெககட்சியில் இணைந்தனர்.
இவ்வாறாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த காரணத்தினால் 6 தொகுதிகள் உள்பட சட்டமன்ற தொகுதிகள் காலியான தொகுதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்.6-ம் தேதி இடைத்தேர்தலானது நடை்பெற இருக்கிறது.
இடைத்தேர்தல் நடைப்பெறும் தொகுதிகளுக்காக இறுதி வேட்பாளர் பட்டியலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற காரணத்தினால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27 ஆகவும் தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்களின் பட்டியலானது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் , போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தவெக சார்பாக போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜய் மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2 ஆம் தேதிகளில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
செப்.25ல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும். அக்.2 ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் சென்று வேனில் பரப்புரை செய்ய இருக்கிறார்
இடைத்தேர்தல் நடைப்பெறும் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் களமானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.