மதுராந்தகத்தில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்: ஆதவ் அர்ஜுனா பேச்சு

இடைத்தேர்தலிலும் வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டோம் என்றார்.
aadav arjuna
Published on
Summary

தமிழக வெற்றிக் கழகத்தின் பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதுராந்தகத்தில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பாக முகவர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

த.வெ.க. காணமால் போகும் என சொன்னவர்கள் காணாமல் போய்விட்டனர்.

தவெக வெற்றி குறித்து திமுக ஆராய்ச்சி

த.வெ.க. எப்படி வென்றது என தி.மு.க.வினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி தமிழக பெண்களின் வெற்றி.

மக்களோடு மக்களாக இருப்பதால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் பெயர் தெரிவதில்லை.

வெறும் இன்ஸ்டாகிராமை வைத்தே தி.மு.க.வை முடித்து விட்டோம்.

ஊழல் முற்றிலும் ஒழிப்பு

த.வெ.க. ஆட்சியில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

எ.வ.வேலு என்ன தியாகியா?

இடைத்தேர்தலிலும் வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டோம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.

எடப்பாடியில் த.வெ.க. போட்டியிட்டிருந்தால் எடப்பாடி பழனிசாமியும் தோல்வி அடைந்திருப்பார்.

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக நிற்கவைக்கிறார் இபிஎஸ்.

மதுராந்தகத்தில் வாக்கிற்கு 10,000 ரூபாய் கொடுத்தாலும் தி.மு.க. டெபாசிட் இழக்கும்.

கடந்த தேர்தலில் தி.மு.க.வால் கள்ள ஓட்டு போடமுடியவில்லை.

மரகதம் ராஜினாமா செய்தது ஏன்?

காசு கொடுத்ததால்தான் ஓ.பி.எஸ். தி.மு.க.வில் சேர்ந்தாரா?

முதலமைச்சர் விஜய் பிரசாரம்

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் 2 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.

கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததா, இல்லையா?

தி.மு.க. ஊழல் செய்யவில்லை என கம்யூனிஸ்டுகள் சொல்ல முடியுமா என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com