தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்

* முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

* சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்

*'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

*ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை

மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு

* 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

* இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு

* சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார்.

* தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது

அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து

* நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது

* உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது

GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி

* பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!

* இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான்

ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுப்படுத்தனும் - ஒன்றுகூடிய ஏஐ நிறுவனங்கள் - பதறியடித்து டிரம்ப் போட்ட பதிவு

*ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்

*ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது

மகாராஷ்டிராவின் மிகப் பணக்கார பாஜக எம்எல்ஏ பிச்சைக்கரராக மாறிய வினோதம்.. என்ன ஆனது?

*ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார்.

*ஒரு ஏழை சமோசா வியாபாரி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.

வெள்ளத்தால் பாதித்த நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் டிசம்பர் வரை 654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு

*2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர்

*சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில் விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர கூட்டம்

*சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.

*அவர்களை குடியேற்ற சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

முடியவே முடியாது.. பொது சிவில் சட்டம் அமலுக்கு பீகாரில் போர்க்கொடி!

*21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

*ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.

ரெட்ரோ ஸ்டைல்‌ ஏஐ படங்களை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!

*ஒரே நபர்‌ ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்‌ உலவ விட்டு வருகின்றனர்‌.

*புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங்‌ செயல்முறை தொடங்குகிறது.

அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி

* ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர்.

* திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.

தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்

* தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!

* தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!

SCROLL FOR NEXT