மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

நம்பிக்கைக்குரிய சட்டசபை உறுப்பினருக்காக மதுராந்தகம் மக்கள் திமுக வேட்பாளரான எனக்கு வாக்களிக்க வேண்டும்.
பரந்தாமன் - மரகதம் குமரவேல்
Published on
Summary

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மற்றும் நாளை மட்டுமே உள்ளது.

திமுக வேட்பாளர்கள்

இந்நிலையில், தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பரந்தாமன் கூறுகையில், நம்பிக்கைக்குரிய சட்டசபை உறுப்பினருக்காக மதுராந்தகம் மக்கள் திமுக வேட்பாளரான எனக்கு வாக்களிக்க வேண்டும்.

தவெக வேட்பாளராக களமிறங்கிய விஜய் பெரம்பூர் தொகுதிக்கும் திருச்சி தொகுதிக்கும் கூட புதிதானவர் என்று கூறினார்.

மரகதம் குமரவேல்

இதேபோல் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முதலமைச்சர் விஜய் பிரசாரம்

முதலமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com