தொலைக்காட்சியின் ஆஸ்கார்.. 78வது எம்மி விருது விழாவில் வெற்றி பெற்ற தொடர்கள், நடிகர்கள் பட்டியல்

விடோஸ் பே (Widow's Bay) சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது.
காமெடி தொடர் விடோஸ் பே - சிறந்த துணை நடிகை விருது வென்ற கேட் ஓ பிளின்
காமெடி தொடர் விடோஸ் பே - சிறந்த துணை நடிகை விருது வென்ற கேட் ஓ பிளின்
Published on
Summary

78வது எம்மி விருதுகள் விழாவில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் இவ்வாண்டு 78வது எம்மி விருதுகள் விழா லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பீகாக் திரையரங்கில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்றது.

இவ்வாண்டு விருது விழாவை பிரபல நடிகை மரிஸ்கா ஹார்கிடா தொகுத்து வழங்கினார்.

இவ்வாண்டு அதிகபட்சமாக விடோஸ் பே (Widow's Bay) தொலைக்காட்சி தொடர் சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது.

அடுத்ததாக தி பிட் (The Pitt) தொடர் சிறந்த டிராமா சீரீஸ் விருதை வென்றது. டிராமா சீரீஸில் சிறந்த முதன்மை கதாபாத்திர விருதை நோவா வைல் வென்றார்.

ஆப்பிள் டிவி, 2026 ஆம் ஆண்டிற்கான எம்மி விருதுகளில் மொத்தம் 28 பிரிவுகளில் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

விருது பட்டியல்

சிறந்த நாடக தொடர் விருதை தி பிட் (The Pitt) வென்றது. தி டிப்லோமேட், பாரடைஸ், பல்ரிப்ஸ் ஆகியவை போட்டியில் இருந்தபோதும் வெற்றி பெறவில்லை.

சிறந்த நகைச்சுவை தொடர் விருதை விடோஸ் பே (Widow's Bay) வென்றுள்ளது.

நாடக தொடரில் சிறந்த நாயகன் விருதை 'தி பிட்' தொடரில் நடித்த நோவா வைல் வென்றார்.

நாடக தொடரில் சிறந்த துணை நடிகர் விருதை 'டாஸ்க்' தொடரில் நடித்த டாம் பெல்ப்ரே வென்றார்.

நாடக தொடரில் சிறந்த துணை நடிகை விருதை 'தி டிப்லோமேட்' தொடரில் நடித்த அலிசன் ஜனே வென்றார்.

காமெடி தொடரில் சிறந்த நாயகன் விருதை 'விடோஸ் பே' வில் நடித்த மேத்யூவ் ரைஸ் வென்றார்.

காமெடி தொடரில் சிறந்த கதாநாயகி விருதை 'ஹேக்ஸ்' (Hacks) தொடரில் நடித்த ஜீன் ஸ்மார்ட் வென்றார்.

காமெடி தொடரில் சிறந்த துணை நடிகர் விருதை 'விடோஸ் பே' வில் நடித்த ஸ்டீபன் ரூட் வென்றார்.

காமெடி தொடரில் சிறந்த றந்த துணை நடிகை விருதை விடோஸ் பே தொடரில் நடித்த கேட் ஓ பிளின் வென்றார்.

Limited or Anthology Series or Movie பிரிவில் சிறந்த துணை நடிகர் விருதை DTF St Louis இல் நடித்த டேவிட் ஹார்பர் வென்றார்.

அதே பிரிவில் சிறந்த துணை நடிகை விருதை அதே DTF St Louis இல் நடித்த லிண்டா கார்டெனெல்லி வென்றார்.

நாடக தொடரில் சிறந்த கெஸ்ட் ரோல் நடிகை விருதை பாரடைஸ் தொடரில் தோன்றிய சைலேன் உட்லி பெற்றார்.

நாடக தொடரில் சிறந்த கெஸ்ட் ரோல் நடிகர் விருதை தி பிட் தொடரில் தோன்றிய எர்னஸ்ட் ஹார்டென் பெற்றார்.

Limited or Anthology Series or Movie சிறந்த இயக்கம் விருது DTF St Louis க்கு சென்றது. அதே பிரிவில் சிறந்த திரைக்கதை விருதும் அதே தொடருக்கு சென்றது.

சிறந்த தொலைக்காட்சி பட விருது 'ரிமார்க்கப்லி பிரைட் கிரியேச்சர்ஸ்' -க்கு வழங்கப்பட்டது.

சிறந்த லைவ் ஷோ விருது The Apple Music Super Bowl LX Halftime Show Starring Bad Bunnக்கு வழங்கப்பட்டது.

சிறந்த TV ஷோ விருது The Muppet Showக்கு வழங்கப்பட்டது.

சிறந்த அனிமேஷன் நிகழ்ச்சி விருது சவுத் பார்க் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com