

கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில்,
ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.
கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.