

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை கட்டுப்படுத்தினால் அது சீனாவுக்கு சாதகமாகிவிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் அதன் அதிவேக வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விவாதம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் ஆந்திரபிக் ஏஐ நிறுவன சிஇஓ டேரியோ அமோடி, ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், கூடுதல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தேவை என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த கருத்துக்கு எக்ஸ் ஏஐ தலைவர் எலான் மஸ்க், ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஆகியோர் உடன்பட்டுள்ளனர்.
ஆனால் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை Slow செய்தால் அது சீனாவுக்கு சாதகமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், "ஏஐக்கு கூடுதல் விதிகளோ கட்டுப்பாடுகளோ தேவையில்லை; ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது பதிவில் சீனா பற்றி எச்சரித்த டிரம்ப் , "ஏஐ மற்றும் டேட்டா சென்டர்களுக்கு எதிராக ஒரு சதி நடக்கிறது. இதனால் மகிழ்ச்சியடையும் ஒரே நாடு சீனா மட்டுமே. ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி ஏஐ வளர்ச்சி வேகத்தை குறைக்க அழைப்பு விடுத்த ஆந்திரோபிக் சிஇஓ டேரியோ அமோடி பற்றி விமர்சித்த டிரம்ப், அவர் உலகை காக்க வந்த "perfect little angel" போல நடிக்கிறார் என்று சாடியுள்ளார்.
தனது நிர்வாகத்திற்கு ஏஐ நிறுவனங்கள் மீது ஏற்கனவே குற்றவியல் மற்றும் சட்டரீதியான முழு அதிகாரம் உள்ளது என்றும், தவறான விஷயங்கள் நடப்பதைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி மற்றும் தரவு மையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஒரு சதித்திட்டத்தின் பகுதியாக செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.