பெண் Biker மீது கார் மோதிய பரபரப்பு வீடியோ.. கொலை முயற்சி வழக்கில் இளைஞர் கைது

சக பைக்கர்களுடன் தனது Aprilia RS 457 பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
வீடியோ
வீடியோ
Published on
Summary

அரியானா மாநிலம் குருகிராமில் பைக்கில் சென்ற பெண்ணை காரால் இடித்துவிட்டுச் சென்ற நபர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நேற்று காலை நடந்த இந்த சம்பவத்தில் குருகிராமின் கோல்ப் கோர்ஸ் சாலையில், சியா என்று அறியப்படும் ஷிவானி சவுகான் என்ற பெண் பைக்கர் சக பைக்கர்களுடன் தனது Aprilia RS 457 பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கல்யான் பைன்ஸ்லா என்பவர் அவ்வழியே காரில் வந்துள்ளார்.

ஹிட் அண்ட் ரன்

அவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காரை ஓட்டி வந்த பைன்ஸ்லா, சியாவின் பைக்கை பாலோ செய்துள்ளார். சியா பைக்கில் இருந்தவாறு, விலகிச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பைன்ஸ்லா, பின்னர் அவரது பைக்கை வேகமாக மோதிவிட்டுச் சென்றுள்ளார்.

இதில் சியா நிலைதடுமாறி பைக்குடன் நடுரோட்டில் கீழே விழுந்தார். இருப்பினும் பைக்கர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்ததால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

வைரல் வீடியோ

மறுபுறம் பைன்ஸ்லாவின் கார் சக்கரம் தீப்பொறி பறக்க அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டுட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வைரல் வீடியோக்களை தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரை தொடர்ந்தும் பைன்ஸ்லா மீது திட்டமிட்ட கொலை வழக்கு பதிவு செய்த குருகிராம் போலீசார் அவரை தேடி வந்தனர்.

கைது

இந்நிலையில் இன்று அவர் ராஜஸ்தானின் தவுசா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் பைன்ஸ்லா, தான் வேண்டுமென்றே பைக் மீது மோதவில்லை என்றும் பைக்கில் இருந்தது பெண் என்று தனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

யு டர்ன் எடுக்கும்போது பைக் மீது தன் கார் மோதிவிட்டதாகவும், அதன்பிறகு பயம் காரணமாக நிற்காமல் சென்றுவிட்டதாகவும் அவர் தன் தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலத்தின்படி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com