

இங்கிலாந்தில் போலீசுக்கு பயந்து தலைமறைவான போதைப்பொருள் வியாபாரி ஒருவன் Wifi மூலம் சிக்கிய சுவாரஸ்ய பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வடமேற்கு லண்டனில் ஜோயல் லூயிஸ் என்ற 34 வயது நபர் 'பாபி டிரக் லைன்' என்ற போதைப்பொருள் நெட்வொர்க்கின் கீழ் போதொப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
வடக்கு கில்பர்ன் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோகைன், ஹெராயின் உள்ளிட்டவற்றை அவர் சப்ளை செய்து வந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகத்தின் பேரில் சில சிறுவர்களை பிடித்து அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்த்தில் லூயிஸ் உடைய செயல்பாடுகள் குறித்து போலீசுக்கு தெரியவந்துள்ளது.
இதை அறிந்த லூயிஸ் முன்னெச்சரிக்கையாக போலீசிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகி உள்ளார்.தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது மொபைல், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் லொகேஷனை ஹைட் செய்யும் VPN நெட்வொர்க்கை அவர் பயனப்டுத்தியுள்ளளார். ஆனால் அவர்களின் சாதனங்களில் ஒன்று அவர் இருக்கும் இடத்தில் இலவச பப்ளிக் WIFI உடன் கனெக்ட் ஆகி இருந்துள்ளது.
அதை வைத்து போலீசார் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் பின் அதிகாரிகள் கைது வாரண்ட் உடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர் கைதில் இருந்து தப்பிக்க அலமாரிக்குள் ஒளிந்துகொண்டிருந்திருக்கிறார். ஆனால் போலீசார் அவர் ஒளிந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்படும்போது அவர், "என்னை எப்படி கண்டுபிடித்தீர்கள்" என திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் செய்யப்பட்டு வந்திருப்பதும் சுமார் 250 டிரக் டீலர்களின் எண்கள் கான்டாக்ட்டில் இருப்பதும் தெரியவந்துள்ளது, மேலும் அவரிடம் இருந்து 8,800 பவுண்ட்கள் மதிப்புள்ள போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது. 6 செல்போன்கள், 8000 பவுண்ட் பணம், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.
சிறார்களையும், இளைஞர்களையும் வைத்து லூயிஸ் இந்த போதைப்பொருட்களை எளிதில் பல இடங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் ஒன்று பாபி நெட்வொர்க் உடன் தொடர்புடையது. அதை வைத்து போலீசார் மொத்த நெட்வொர்க்கையும் பிடிக்கும் முயற்சியில் உள்ளனர்.