வழிபாடு

திருப்பதி கோவிலில் அங்க பிரதட்சண டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம்

Published On 2025-11-07 14:10 IST   |   Update On 2025-11-07 14:10:00 IST
  • பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.
  • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யபட்டுள்ளது.

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் பெற, 3 மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் வெளியிடப்படும். இதில் பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்யும் பக்தர்களில் முதல் 750 பேருக்கு மட்டும் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்கான டோக்கன்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் வெளியிடப்படும் என்பதால் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்க பிரதட்சணம் செய்ய டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 61,718 பேர் தரிசனம் செய்தனர். 21,937 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News