கோவில்கள்

கார்த்திகையில் கண் திறந்து காட்சி தரும் சோளிங்க நரசிம்மர்

Published On 2025-11-21 20:52 IST   |   Update On 2025-11-21 20:52:00 IST
  • மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பானதாக கருதப்படுகிறது நரசிம்ம அவதாரமாகும்.
  • மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை சப்த ரிஷிகள் தரிசிக்க விரும்பினர்.

ஒருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும், அவையனைத்தும் நரசிம்மரிடம் முறையிடுங்கள்.. அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்..

ஏனென்றால், நரசிம்மரிடம் நாளை என்பதே கிடையாது. எதுவாயினும் உடனடியாக அந்த நொடியிலேயே தீர்த்து வைப்பவராக இருப்பதால்தான், நரசிம்மர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்..

அப்படிப்பட்ட சக்திவாய்ந்த சோளிங்க நரசிம்ம பெருமான் கார்த்திகையில் கண் திறப்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்..!

உலகை ஆளும் தெய்வசக்தியின் ஒன்றே மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பானதாக கருதப்படுகிற நரசிம்ம அவதாரமாகும்.

சிறுவனாகிய பக்தன் பிரகலாதன், எந்த நேரம், எங்கே இருப்பதாக தன்னை கூறுவானோ என்று கருதி, அவனருகிலேயே நரசிம்மர் உடனிருந்ததாக கூறுவர்.

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் எனது ஹரி என்று பிரகலாதன் கூறுகையில், எந்த இடத்தை கை காட்டுவானோ என்று நரசிம்மர் தயாராக இருந்தாராம்.

அதையடுத்தே கண நேரத்தில் வெளிப்பட்ட நரசிம்மர், இரணியனை வதம் செய் என பிரகலாதனுக்கு அருள்புரிந்தார். இந்நிலையில், பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தை சப்த ரிஷிகள் தரிசிக்க விரும்பினர்.

அதற்காக, சப்த ரிஷிகள் செய்த கடும் தவத்தை கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக ஒரு நாழிகைக்குள் காட்சியளித்தார்.

சப்த ரிஷிகள் தங்களுக்கு கிடைத்த நரசிம்மரின் தரிசனம், பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நரசிம்மரிடம் கோரிக்கை விடுத்தனர்.

சப்த ரிஷிகள் வேண்டியதன்பேரில், அவர்களுக்கு காட்சியளித்தது போன்றே பொதுமக்களுக்கும் தரிசனமளிப்பதாக நரசிம்மர் தெரிவித்தார்.

ஆண்டு முழுவதும் கண் மூடி தியானத்தில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்புரிவதாக கூறினார்.

அதன்படி, கார்த்திகை மாதம் நரசிம்ம பெருமாள் கண் திறந்து தரிசனம் தருகிறார். தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் சோளிங்கருக்கு வருகை தந்து நரசிம்மரை தரிசித்து செல்கின்றனர்.

Tags:    

Similar News