புதுச்சேரி

அறிவியல் கண்காட்சியை அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்ட காட்சி.

மண்டல அறிவியல் கண்காட்சி

Published On 2022-11-28 09:31 GMT   |   Update On 2022-11-28 09:31 GMT
  • புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது.
  • பள்ளி மைதானத்தில் அரசு நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையும் அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார்.

புதுச்சேரி:

புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கியது.

இதன் தொடக்கவிழா நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி, ரிப்பன்வெட்டி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்த படைப்புகளிடம் விளக்கம் கேட்டார்.

பள்ளி மைதானத்தில் அரசு நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டி ருந்தது. இதனையும் அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டார். அறிவியல் கண்காட்சியில் புதுவை அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் 400-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தது.

விண்வெளி, நீர் சேமிப்பு, சோலார் சிஸ்டம், பேட்டரி வாகனம், தாவர வளர்ப்பு என பல படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களிடம் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துரையாடினார். மாணவர்களின் சந்தேக ங்களுக்கு அவர் பதிலளி த்தார். மண்டல அளவிலான கண்காட்சி வருகிற 30-ந் தேதி நிறைவு பெறுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகள் மாநில கண்காட்சியில் இடம்பெறுகிறது. மாநில அறிவியல் கண்காட்சி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. 

Tags:    

Similar News