புதுச்சேரி

கோப்பு படம்

இளம் பெண் கடத்தல்

Published On 2022-06-18 10:04 IST   |   Update On 2022-06-18 10:04:00 IST
  • தவளக்குப்பம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் கடத்தப்பட்டார்.
  • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வேல்விழி இறந்து விட்டதால் தமிழ்வேல் ஆனந்தி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

புதுச்சேரி:

தவளக்குப்பம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் கடத்தப்பட்டார். தவளக்குப்பம் அருகே கொருக்குமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்வேல். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி வேல்விழி. இவர்களுக்கு ரம்யாகிருஷ்ணன்(வயது19) என்ற மகளும், ராமகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வேல்விழி இறந்து விட்டதால் தமிழ்வேல் ஆனந்தி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே ரம்யா–கிருஷ்ணனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 1½ மாதத்துக்கு முன்பு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்–பட்டது.

இந்த நிலையில் வழக்கம் போல் தமிழ்வேல் வேலைக்கு சென்றார். மாலையில் அவரது தாயார் போன் செய்து ரம்யாகிருஷ்ணன் யாரோ அடையாளம் தெரியாத வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் செல்வதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ்வேல் உடனே வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டில் இருந்த ரம்யாகிருஷ்ணன் துணிமணிகள் ஏதும் இல்லை. ரம்யாகிருஷ்ணனை யாரோ கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்வேல் தனது மகள் கடத்தப்பட்டது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News