புதுச்சேரி

மணக்குள விநாயகர் மருத்துவமனையில் உலக மனநல வார விழா நடைபெற்ற காட்சி.

உலக மனநல வார விழா

Published On 2022-10-13 09:44 IST   |   Update On 2022-10-13 09:44:00 IST
  • புதுவை மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநலத் துறையும் செவிலியர் கல்லூரியின் மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல தினம் கொண்டாடியது.
  • இவ்விழாவின் ஒரு பகுதியாக மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி:

உலக மனநல வார விழாவை முன்னிட்டு புதுவை மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநலத் துறையும் செவிலியர் கல்லூரியின் மனநல செவிலியர் துறையும் இணைந்து உலக மனநல தினம் கொண்டாடியது.

தொடக்க விழாவை மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத் தலைவர் சுகுமாறன் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மருத்துவ கல்லூரி இயக்குனர் ராஜகோவிந்தன் துணை இயக்குனர் காக்னே, டீன் (அகடாமிக்) கார்த்திகேயன், டீன் (ஆராய்ச்சி) கலைசெல்வன் மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் மனநல துறை தலைவர் அருண் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்கள்.

இவ்விழாவின் ஒரு பகுதியாக மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. டாக்டர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மனநலத்தின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பி மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News