புதுச்சேரி

தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

30-வது நாளாக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2022-12-08 12:36 IST   |   Update On 2022-12-08 12:36:00 IST
  • புதுவை தொண்ட மாநத்தம் தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் 30 ஆண்டுக்கும் மேல் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  • சி.ஐ.டி.யூ. தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் 30-வது நாளாக தொழிலாளர்கள் இந்த போராட்டதை தொடர்ந்து வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை தொண்ட மாநத்தம் தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் 30 ஆண்டுக்கும் மேல் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு 8 ஆண்டாக சம்பள உயர்வு தராமல் தொழிற்சாலை நிர்வாகம் ஏமாற்றி வருகிறது. கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், அரசு உத்தரவுகளை மதிக்காமல் நிர்வாகம் செயல்பட்டு வருவதை கண்டித்தும், புதுவை அரசு உத்தரவுகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சி.ஐ.டி.யூ. தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் 30-வது நாளாக தொழிலாளர்கள் இந்த போராட்டதை தொடர்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News