புதுச்சேரி

கோப்பு படம்

படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-06-08 11:06 IST   |   Update On 2022-06-08 11:06:00 IST
  • மாடி படிக்கட்டில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார்.
  • கால் தவறி கீழே விழுந்து விட்டார்.

புதுச்சேரி:

கரிக்கலாம்பாக்கம் அருகே தனிகுப்பம் சுப்பையாநகரை சேர்ந்தவர் குமரன்(வயது61). கட்டிட தொழிலாளி.

குமரன் வீட்டின் மாடிக்கு செல்ல படிக்கட்டில் ஏறி சென்றார். அப்போது கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது உறவினர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News