கோப்பு படம்.
- கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதற்கிடையே தேசிங்கு பாகூர் பகுதியை சேர்ந்தஒருவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.
புதுச்சேரி:
கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர் ஏரிக்கரை வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (34) டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை தேசிங்கு. (வயது 60) இவர் பாகூர் அருகே தமிழக பகுதியான திருப்பணாம் பாக்கத்தில் தனது மனைவியுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.இதற்கிடையே தேசிங்கு பாகூர் பகுதியை சேர்ந்தஒருவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார். வேலை முடிந்த பின்னர் தினமும் மது குடித்து விட்டு வந்தாதால் தோட்ட வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அவரை குடும்பத்தினர் கூறிவந்தனர்.
ஆனாலும் தேசிங்கு தொடர்ந்து அங்கு வேலை செய்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று தோட்ட வேலைக்கு சென்ற தேசிங்கு அதன் பிறகு வீடு திரும்ப வில்லை.
இந்த நிலையில் தேசிங்கு அவர் வேலை பார்த்து வந்த தோட்டத்தில் தேக்கு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கு வதாக அவரது மகனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து கார்த்திக் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் மன அழுத்தத்தின் காரணமாக தனது தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.