புதுச்சேரி

மகளிர் குழுவினர் தயாரித்த செக்கு எண்ணெய் விற்பனையை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி பாடம்.

மகளிர் உணவு பாதுகாப்பு குழுவினர் சார்பில் செக்கு எண்ணெய் தயாரிப்பு

Published On 2022-06-10 15:21 IST   |   Update On 2022-06-10 15:21:00 IST
  • மணப்பட்டு கிராமத்தில் மகளிர் உணவு பாதுகாப்பு குழுவினர் சார்பில் செக்கு எண்ணெய் தயாரிப்பு விற்பனையை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தர்.
  • மகளிர்கள் உணவு பாதுகாப்பு குழு ஆரம்பித்து அப்பகுதியில் ஈஸ்வரன் செக்கு எண்ணெய் உற்பத்தியாளர் குழு என தொடங்கியுள்ளனர்

புதுச்சேரி:

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் மூலம் மத்திய அரசின் வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் ரூ 85 லட்சத்திற்கு மிகாமல் எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம், ஆத்மா மற்றும் மகளிர் உணவு பாதுகாப்பு குழு குழுவிற்கு வழங்கப்பட்டு வருகிறது ‌

இத்திட்டத்தின்கீழ் மணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 5 மகளிர்கள் உணவு பாதுகாப்பு குழு ஆரம்பித்து அப்பகுதியில் ஈஸ்வரன் செக்கு எண்ணெய் உற்பத்தியாளர் குழு என தொடங்கியுள்ளனர்.

இந்த குழுவின் மூலம் செக்கு எண்ணெய் தயாரிக்கும் மையத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார். இந்நிகழ்ச்சிக்கு பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இணை வேளாண் இயக்குனர் சந்தானகிருஷ்ணன், துணை வேளாண் இயக்குனர் சிவசுப்பிரமணியன், வேளாண் அலுவலர் வளர்மதி வாசுதேவன், உதவி வேளாண் அலுவலர்கள் ராமமூர்த்தி, நாராயணசாமி மற்றும் சுய உதவிக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆத்மா வட்டார தொழில்நுட்ப பிரிவு மேலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News