புதுச்சேரி

கோப்பு படம்.

கழிவு நீர் கலந்த நீரை குடித்த பெண் சாவு

Published On 2023-09-02 13:27 IST   |   Update On 2023-09-02 13:27:00 IST
  • உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
  • நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி:

கண்டமங்கலம் அருகே உள்ள நவமாள்மருதூரில் கடலூர் செல்லங் குப்பத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி சியாமளா (வயது 44). கழிவு நீர் கலந்த நீரை குடித்து விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கடந்த 28-ந் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை என உறவினர்கள் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில்   2 முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை 9.45 மணி அளவில் சியாமளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இதனை எடுத்து சியாமளாவின் உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் சியாமளா இறந்து விட்டார் என்றும் அதற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கழிவு நீர் கலந்த நீரை குடித்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News