புதுச்சேரி

கோப்பு படம்.

நகை திருடிய பெண் கைது

Published On 2022-12-25 11:10 IST   |   Update On 2022-12-25 11:10:00 IST
  • மின்துறை ஊழியர் வீட்டில் நகைகளை திருடி சென்ற வீட்டு வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
  • இந்தநிலையில் சந்திரசேகரின் மனைவி பீரோவில் வைத்திருந்த சுமார் 20 பவுனுக்கு மேல் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.

புதுச்சேரி:

மின்துறை ஊழியர் வீட்டில் நகைகளை திருடி சென்ற வீட்டு வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது43). புதுவை மின்துறை அலுவலகத்தில் முதுநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக நெல்லித்தோப்பு தச்சர்வீதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மனைவி செல்வி (36) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார்.

இடையில் 2 ஆண்டுகள் செல்வி வீட்டுக்கு வேலைக்கு வரவில்லை. பின்னர் தற்போது 6 மாதமாக மீண்டும் சந்திரசேகர் வீட்டில் செல்வி வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் சந்திரசேகரின் மனைவி பீரோவில் வைத்திருந்த சுமார் 20 பவுனுக்கு மேல் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இந்த தங்க நகைகளை செல்வி திருடி சென்றிருக்கலாம் என சந்திரசேகர் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வி நகைகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து செல்வியை செய்து அவரிடமிருந்து நகை களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News