புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு விழாவில் கவர்னர் அரசியல் பேசுவதா?

Published On 2023-09-07 05:16 GMT   |   Update On 2023-09-07 05:16 GMT
  • தி.மு.க. எம்.எல்.ஏ. கண்டனம்
  • எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் அநாரீக முறையில் பேசு வது பண்பாட்டிற்கு முறையானது அல்ல.

புதுச்சேரி:

புதுவை மாநில திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

அரசு விழாக்களில் கவர்னர் அரசியல் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும் அவர் பதவியினை விட்டு விலகி அரசியல் கருத்துக்களை தாராளமாக கூறலாம்.

மாற்று கொள்கை உடைய எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் அநாரீக முறையில் பேசு வது பண்பாட்டிற்கு முறையானது அல்ல. மாநில உரிமைக்காக சட்ட மன்றத்தில் நிறை வேற்றிய தீர்மானங்களை உடனடியாக மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பாமல் எங்கே தன் அதிகாரம் பறிபோய் விடுமோ? என்று கருதுவது தான் சனாதனம். கவர்னர் அரசியல் செய்ய நினைத்தால் திமுக அதனை சந்திக்க தயாராக இருக்கிறது.

எதிர்கொள்ள முனைப்போடும் இருக்கிறது என்பதை சனாதன எதிர்ப்பு கொள்கையாக தெரிவித்து கொள்கிறேன்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News