ஏழைகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
- புதுவை அரிச்சுவடி மனநல மையம் இயக்குனர் டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இயக்குனர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோரின் தந்தை பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
- நலத்திட்ட உதவியாக ஏழைகளுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை அரிச்சுவடி மனநல மையம் இயக்குனர் டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி இயக்குனர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோரின் தந்தை பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலின் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கரன் என்ற தட்சிணாமூர்த்தி எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நலத்திட்ட உதவியாக ஏழைகளுக்கு வேட்டி-சேலை மற்றும் அன்னதானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை டாக்டர் இளவழகன், டாக்டர் சத்தியவண்ணன் மற்றும் சகோதரர் ஆறுமுகம், மருமகன் ரவிச்சந்திரன், மகள் அரசம்மா தேவி ரவிச்சந்திரன், மருமகள் முத்து காமாட்சி சத்திய வன்னன், பேத்திகள் மோனி ஸ்ரீ தாரணி குமாரி மற்றும் உறவினர்கள், அரிச்சுவடி ஊழியர்கள் நண்பர்கள் செய்திருந்தனர்.