புதுச்சேரி

நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கிய காட்சி.

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-புஸ்சிஆனந்த் வழங்கினார்

Published On 2023-02-20 12:24 IST   |   Update On 2023-02-20 12:24:00 IST
  • புதுவை மாநில நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லித்தோப்பு, மணவெளி, மங்கலம் ஆகிய தொகுதிகளில் 5 இடங்களில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
  • ஆயிரம் பேருக்கு மதிய உணவு, பொதுமக்களுக்கு இனிப்பு, நீர் மோர் ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

புதுச்சேரி:

புதுவை மாநில நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லித்தோப்பு, மணவெளி, மங்கலம் ஆகிய தொகுதிகளில் 5 இடங்களில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், 500 பெண்களுக்கு சேலைகள், 500 பேருக்கு அரிசி, 300 பேருக்கு சர்க்கரை 200 பேருக்கு சில்வர் குடங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ேமலும் ஆயிரம் பேருக்கு மதிய உணவு, பொதுமக்களுக்கு இனிப்பு, நீர் மோர் ஆகியவற்றையும் அவர் வழங்கினார். புதுவை மாநில செயலாளர் சரவணன் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு கொண்டனர்.

Tags:    

Similar News