புதுச்சேரி

சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகள்

Published On 2022-08-14 13:39 IST   |   Update On 2022-08-14 13:39:00 IST
  • 75-வது சுதந்திர தின விழா சின்ன கோட்டக்குப்பம் 14 வது வார்டில் இன்று கொண்டாடபட்டது. 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் அனைவரையும் வரவேற்றார்.
  • விழாவில் சிறப்பு விருந்தி னராக கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.

புதுச்சேரி:

75-வது சுதந்திர தின விழா சின்ன கோட்டக்குப்பம் 14 வது வார்டில் இன்று கொண்டாடபட்டது. 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தி னராக கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் 80 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா - பென்சில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

விழாவில் 14-வது வார்டை சார்ந்த 36 மகளிருக்கும் தூய்மை பணியாளர்கள் 3 நபர்களுக்கு புடவை வழங்கப்பட்டது.

விழாவில் முஹம்மது முபாரக், சுகுமார் 15-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜாகீர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவி தன்யாஸ்ரீ பாரதியார் வேடத்திலும், மாணவர் கிரண்பாலா மகாத்மா வேடமிட்டு வந்தது அனைவரையும் கவர்ந்தது.

இந்த விழாவை ஆசிரியர் மஞ்சுளா ஒருங்கிணைப்பு செய்திருந்தார். விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகளை நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி வழங்கினார். அருகில் வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் மற்றும் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News